Header Ads

Header ADS

DTEd - தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு



தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (DEE)  ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்றுமுதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவமாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை  அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்  வெள்ளிக்கிழமை பிற்பகல்  முதல் தெரிந்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல்  முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க...

மாணவ,  மாணவிகள்  விடைத்தாள்களின் ஒளிநகல் பெற,  விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம்  செய்து கொண்டு,  அதனைப் பூர்த்தி செய்து,  அந்த விண்ணப்பத்துடன்  அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 5 செவ்வாய்க்கிழமை முதல் 7-ஆம் தேதி வியாழக்கிழமை வரையிலான நாள்களில் சம்பந்தப்பட்ட  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில்   நேரடியாகச் செலுத்தி ஆன்-லைன்  மூலம்  பதிவேற்றம் செய்யுமாறு  அறிவுறுத்தப்படுகின்றனர்.விடைத்தாளின் ஒளி நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள  தேர்வர்கள்  மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.