நுரையீரல் பாதிப்பிலிருந்து காக்கும் உணவுப் பொருள்கள் எவை தெரியுமா...?
புகையிலையில் உள்ள நிகோடின் என்ற மூலப்பொருள் நுரையீரலை பாதிக்கும். மேலும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாகவும் இருக்கிறது.
நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரல் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆரஞ்சு, தக்காளி போன்ற காய்கறி, பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை உடலில் கலந்திருக்கும் நிகோடின் போன்ற நச்சுக்களை வேகமாக அகற்ற உதவும்.
நுரையீரலை சுத்தமாக வைத்து கொள்ளவும், எல்லாவித பாதிப்பில் இருந்தும் காக்கவும் கிரீன் டீ உங்களுக்கு உதவும். இதிலுள்ள பாலிபீனல்ஸ் நுரையீரல் தசைகளை வீக்கம் அடையாமல் பார்த்து கொள்ளும். இதனால் சுவாச கோளாறுகள் உண்டாகாது.
இரத்தத்தில் கலந்திருக்கும் நச்சுகளை விரைவாக அகற்ற காரட் ஜூஸ் உதவும். இதில் இருக்கும் உயர் ரக வைட்டமின் ஏ, சி, கே, மற்றும் பி உங்கள் உடல் நலனை மேலோங்க செய்ய வெகுவாக உதவும்.
ப்ரோக்கோலியில் சல்ஃபரோபேன் எனும் மூலப்பொருள் இருக்கிறது. இது நுரையீரலின் காயங்களை விரைவில் ஆற்ற உதவும். மேலும் உணவில் சீரான அளவில் தக்காளியை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படாதாம்.
பசலைக்கீரை நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திய பிறகு, நீங்கள் தினமும் கட்டாயம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரகங்களுக்கும் நல்லது.
No comments
Post a Comment