வதந்தி பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை?: வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கேள்வி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, February 6, 2019

வதந்தி பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை?: வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு கேள்வி



வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை கொண்டு வரவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்தி பொய் செய்திகள், வதந்திகள், தவறான தகவல்கள் பரவுவது சாதாரணமாகிவிட்டது. மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இது தொடர்பாக  வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வாட்ஸ்ஆப் நிறுவனம் வதந்திகளை யார் உருவாக்கினார்கள் மற்றும் அதை களையெடுப்பதற்கான சட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்குவது அவசியம் என்றும் அரசு கூறியுள்ளது. சிறந்த சட்டத்தை கட்டாயமாக்குவதற்கான ஒருங்கிணைப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கை  எடுக்கப்படுகிறது.

No comments: