குழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 25, 2019

குழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்!





டீச்சர்... எனக்கு ஹோம் ஒர்க் ஏன் தர்றீங்க? எனக்கு பிடிக்கல.. வைரலான குட்டிப் பையன் லெட்டர்

சேக்ரமெண்டோ: டீச்சர்... எனக்கு ஹோம் ஒர்க் ஏன் தர்றீங்க? எனக்கு பிடிக்கல" குட்டிப்பையன் தன் ஆசிரியருக்கு எழுதிய லட்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஹோம் ஒர்க் என்றாலே வராத வயிற்று வலியை கூட வரவழைத்து எஸ்கேப் விடுவார்கள் நம்ம வீட்டு வாண்டுகள். ஸ்கூல்ல படிக்கிறதே முழி பிதுங்கும்போது, இதுல வீட்ல வேறு உட்கார்ந்து ஹோம் ஒர்க் பண்ணணுமான்னு நிறைய குழந்தைகள் நினைக்கறது சகஜம்தான்.

அப்படி ஹோம் ஒர்க் ஒரு சுட்டிப்பையன் மறுத்து இருக்கிறான். மறுத்ததுடன், இப்படியெல்லாம் ஹோம் ஒர்க் தரக்கூடாதுன்னும் சொல்லி அவனுடைய டீச்சருக்கு ஒரு லட்டரும் எழுதியிருக்கான்.
 
சிறுவன் கடிதம்

கலிபோர்னியாவில்தான் இந்த சம்பவம் நடந்திருகிறது. அந்த சிறுவன் பெயர் எட்வர்ட் இம்மானுவேல். ஏன் ஹோம் ஒர்க் எழுதவில்லை என்று டீச்சர் அவனை கேட்டிருக்காங்க போல. அதுக்கு சிறுவன் எழுதிய லட்டர்தான் இது.

எனக்கு பிடிக்கல

அந்த கடிதத்தில், ''டீச்சர்.. வார இறுதி நாட்களில் ஹோம் ஒர்க் எழுத பிடிக்கல. இது நான் டிவி பார்க்கும் டைம், என் நண்பர்கள்கூட விளையாடற டைம். இந்த நிஜமான உலகத்தில் ஹோம் ஒர்க் என்பதெல்லாம் ஒரு மாயை. அதனால் ஒரு பலனுமில்லை. அதனால் இனிமே ஹோம் ஒர்க் தர்றதை நிறுத்த வேண்டும்' என்று எழுதி உள்ளான்.

ஃபைனல் டச்

இத்தோடு விட்டால் பரவாயில்லையே.. கடைசியாக ''இத்துடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது'' என்று ஏதோ கோர்ட் கேஸ்-க்கு தீர்ப்பு வழங்குவது போல ஒரு ஃபைனல் டச் கொடுத்து முடித்திருக்கிறான் அந்த சிறுவன்.
 
மழலை கடிதம்

இந்த கடிதத்தை அந்த டீச்சர் சிறுவனின் பெற்றோருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போதுதான் வீட்டுக்குகே விஷயம் தெரிந்திருக்கிறது. உண்மை மற்றும் துணிச்சலுடன் கூடிய மழலையுடன் சிறுவன் எழுதியிருக்கும் இந்த கடிதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments: