ஜாக்டோ-ஜியோ துணை முதல்வர் சந்திப்பு நடைபெறவில்லை. . நாளைக்குள் நல்ல செய்தி வரும் நிர்வாகிகள் தகவல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, February 6, 2019

ஜாக்டோ-ஜியோ துணை முதல்வர் சந்திப்பு நடைபெறவில்லை. . நாளைக்குள் நல்ல செய்தி வரும் நிர்வாகிகள் தகவல்





இன்று துணை முதல்வர் சந்திப்பு நடைபெறவில்லை.அவர் அவசரமாக மதுரை சென்றார். பதிலாக மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்தோம்.இன்று அல்லது நாளைக்குள் அனைத்து நடவடிக்கைகளும் இரத்து செய்ய ஆணை பிறப்பிப்பதாக(துணை முதல்வருடன் பேசி) உத்தரவாதம் அளித்துள்ளார். நாளைக்குள் நல்ல செய்தி வரும்




*இவண் ஜாக்டோ-ஜியோ*

*JACTTO-GEO update:*

 ஜாக்டோ ஜியோ  போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்களது பாதிப்புகளை ரத்து செய்திட வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், செயலாளர் அவர்களையும் ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களிடம் பேசியபோது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் நேற்று முதல்வர் இடத்தில் பேசியிருப்பதாகவும் இன்றும் உறுதியாக நல்ல முடிவினை அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்...இன்று 06.02.19 புதன் அன்று JACTTO JEO வின் சார்பாக துணைமுதல்வர் ஐ சந்திப்பதாக இருந்தது ஆனால் அவர் இன்று காலை அவசரமாக மதுரை சென்று விட்டபடியால் கல்வி அமைச்சர் சந்திப்பு நடந்தது அவர் முதலமைச்சர் துணை முதலமைச்சர் இருவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது இருவரும் சென்னை திரும்பியதும் விவாதித்து விட்டு நடவடிக்கைகள் திரும்பப் பெற அறிவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார் மேலும் பள்ளி கல்வி இயக்குநருக்கு. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்....

No comments: