Header Ads

Header ADS

பொதுத்தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை


Image result for ஸ்கெட்ச், கிரயான்சு



 பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள், அடுத்த மாதம் நடக்கின்றனபிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. இந்நிலையில், அரசு தேர்வு துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



 தேர்வுத்துறை இணை இயக்குனர், சேதுராம வர்மா விதித்துள்ள அந்தக் கட்டுப்பாடுகள், மாணவர்கள் ஹால் டிக்கெட்களின் பின்பக்கம் அச்சிடப்பட்டு உள்ளது.அதன் விபரம்

பொது தேர்வில், ஹால் டிக்கெட் இல்லாமல் வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது மொபைல் போன், தொலை தொடர்பு மின்னணு சாதனங்களை, தேர்வு மையங்களுக்குள் எடுத்து வர அனுமதியில்லை.

மாற்று திறனாளி மாணவர்களுக்கு, அரசின் விதிப்படி, உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன தேர்வர்கள், தங்கள் விடைத்தாளில், ஸ்கெட்ச் பேனா மற்றும் கிரயான்ஸ் போன்ற, வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதி இல்லை தேர்வர்கள், 'பிட்' வைத்திருத்தல், பிற தேர்வர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாளை பரிமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை தேர்வு விதிகளை மீறும் செயல்.
 
தேர்வர்கள், தாங்கள் எழுதிய விடைகளை, தாங்களே அடித்தல் போன்ற நிகழ்வுகள், ஒழுங்கீன செயல்களாக கருதப்பட்டு, அதற்கான தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.