Header Ads

Header ADS

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை பயன்களா...?





தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, புழுக்களும் வெளியேறிவிடும். மேலும் அது இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிக சிறந்தது.
 
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. சமைத்தால் அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.

பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8-லிருந்து 12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்.

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.