Header Ads

Header ADS

உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!



அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்' என, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், பழையகாயல் ஜஸ்டின் திரவியம் தாக்கல் செய்த மனுவில், 'அதே பகுதியில் உள்ள, ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதை அங்கீகரித்து, அதற்குரிய சம்பளம் மற்றும் இதர நிலுவை பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஜஸ்டின் திரவியம் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'இப்பள்ளி நிர்வாகம், மற்றொரு பள்ளி நடத்துகிறது. அதில் உள்ள உபரி ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றலாம். மனுதாரரை புதிதாக நியமித்தது ஏற்புடையதல்ல' என, தெரிவிக்கப்பட்டது.
 
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்; உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; அவர்களுக்கு மாதந்தோறும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? என்பதை, தமிழக அரசு மார்ச், 13ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, உத்தரவில் கூறினர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.