Header Ads

Header ADS

ஸ்மார்ட்ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது!



ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களின் தற்போதைய மிகப்பெரிய பிரச்சினை ஸ்டோரேஜ் அளவு குறைவாக இருப்பது தான். மெகா பிக்சல்களை அதிகப்படுத்திய கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் அளவில் பெரியதாக இருக்கின்றன. வீடியோக்களின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது. அப்ளிகேஷன்கள் சேகரித்து வைக்கும் தகவல்களின் அளவும் அதிகமாகிறது. ஆனால், ஸ்டோரேஜ் மட்டும் குறைந்த அளவிலேயே இருக்கிறதென்பது ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களின் குறையாக இருந்துவந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள microSDHC Express, microSDXC Express and microSDUC Express ஆகிய புதிய வகை மெமரி கார்டுகளின் உதவியால் இந்த குறை நீங்கப்போகிறது.
 
பார்சிலோனாவில் நடைபெற்றுவரும் மொபைல் வேர்ல்டு கான்ஃப்ரன்ஸ் நிகழ்ச்சியின் அங்கமாக மேற்குறிப்பிட்ட புதிய வகை மெமரி கார்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது SD அமைப்பு. புதிய வகை மெமரி கார்டுகள் கிட்டத்தட்ட 900MB அளவிலான தகவல்களை ஒரு நொடியில் அனுப்பும் வசதி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி தகவல் பரிமாற்றம் செய்யும்போதும், குறைந்த அளவிலான பேட்டரி சக்தியையே இவை பயன்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
 
பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களைப் பொறுத்தவரையில், தற்போது புழக்கத்திலிருக்கும் மெமரி கார்டுகள் அதிக பேட்டரி சக்தியை இழுப்பதால், குறைந்த அளவிலான ஸ்டோரேஜ் வசதிகளை ஸ்மார்ட்ஃபோன்களில் கொடுத்துவந்தனர். அதிக ஸ்டோரேஜ் வசதி கொடுத்தால், அதற்கு செலவிடும் அளவுக்கு பேட்டரி திறனை அதிகரிக்கவேண்டியதிருக்கும். அப்படி அதிகரித்தால், ஸ்மார்ட்ஃபோனின் விலையும் அதிகமாகும். எனவே, குறைந்த ஸ்டோரேஜ் வசதிகளைக் கொடுத்து மக்களை ஆழ் துயரில் ஆழ்த்தினர். ஆனால், புதிய மெமரி கார்டுகள் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதால் இனி உருவாக்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களில் கணிசமான ஸ்டோரேஜ் வசதி அதிகரிப்பைக் காணலாம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.