ஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவு.
மாணவர்களைப் போன்று, ஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு
மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகைபதிவு, 'வருகை பதிவு செயலி (டி.என். ஸ்கூல் அட்டெனென்ஸ் ஆப்)' மூலம் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் வருகையையும் இந்த செயலி மூலம் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை:
வருகை பதிவு செயலியை 'லாகின்' செய்த பின், பள்ளி விபரங்களுக்கு மேல் பகுதியில் 'டீச்சர் ஐகானை' தெரிவு செய்து ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பெற வேண்டும். அதை தொடர்ந்து ஆசிரியர்களின் பெயருக்கு எதிரே வருகையா (பி), விடுப்பா (எல் அல்லது ஏ) என்பது குறித்த விபரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
விடுமுறையாக இருப்பின் தற்செயல்விடுப்பா (சி.எல்.,), மருத்துவ விடுப்பா (எம்.எல்.,) என்பதை'டிராப் டவுன் லிஸ்ட் பாக்சில்' இருக்கும் பட்டியலில் 'கிளிக்' செய்ய வேண்டும்.மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யும்போது 'ஆப்லைன்' மூலம் பதிவு செய்ய வசதி கொடுக்கப்பட்டது. ஆசிரியர்களின்வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
வருகை பதிவில் தவறு இருப்பின் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே அதற்கான பொறுப்பு. ஒவ்வொரு நாளும் வருகை பதிவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment