Header Ads

Header ADS

3 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு! - பட்ஜெட்டில் அறிவிப்பு

முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு! - பட்ஜெட்டில் அறிவிப்பு

 பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும்பெண்
குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.துணை முதல்வரும், நிதி அமைச்சருமான .பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று தமிழக பட்ஜெட்டைதாக்கல் செய்தார்.

அதன்படி அவர் சட்டப்பேரவையில்பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். அதில், தமிழகத்தில் கடந்த ஆண்டில்பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,000 ஆக குறைந்துள்ளது.எனவே பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அத்திட்டத்திற்கு 48.70கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.