அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - பள்ளிக்கல்வித் துறை
அரசு
மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மார்ச், 1 முதல், விடுமுறை எடுக்க, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மார்ச், 1ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.இதையடுத்து, தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு, இந்த வாரம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட வாரியான கூட்டங்களில், இணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள்பங்கேற்று, விதிகளை விவரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுரைகள்:
அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், பொது தேர்வு கண்காணிப்பு, ஏற்பாடு பணிகளில் ஈடுபட வேண்டும். தேர்வு முன்னேற்பாட்டு கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் ஒதுக்கும்இடங்களில், தேர்வு பணிக்கு செல்ல வேண்டும்.தேர்வு பணியை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தற்செயல் விடுப்பு, அவசர விடுப்பு போன்றவற்றை எடுக்கக் கூடாது. மார்ச், 1 முதல், தேர்வு பணி முடியும் வரை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க கூடாது. மருத்துவ விடுப்பு என்ற பெயரில், போலியான காரணங்கள் கூறி, கடிதம் எடுத்துவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.
No comments
Post a Comment