வாட்ஸ் அப் - ல் டைப் பண்ணாமலே மெசெஜ் அனுப்பலாம்! New Update - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, January 17, 2019

வாட்ஸ் அப் - ல் டைப் பண்ணாமலே மெசெஜ் அனுப்பலாம்! New Update



வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவர்களின் தேவைக்கேற்ப பல வசதிகளையும் அந்நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில் இனி வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்ப டைப் பண்ண தேவையில்லை. இனி நாம் வாயால் சொன்னாலே அதுவே டைப் பண்ணிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தி உள்ளது.
 
அதாவது, இந்த புதிய அப்டேட் மூலம்வாய்ஸ் மெசெஜ் அனுப்ப தனியாக மைக் போன்றதொரு ஐகான் இருக்கும். இதையே தற்போது நாம் உபயோகப்படுத்தி வருகிறோம்.
இனி வாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய அப்டேட்டுகளால் மெசெக்களை நம் வாயால் சொன்னாலே போதும், வாட்ஸ் அப்பில் உள்ள மற்றொரு புதிய ஐகான் நமக்காக அந்த மெசெஜ்ஜை டை செய்து விடும். இப்புதிய மைக் ஐகான் தற்போது எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கூகுள் அஸிஸ்டெண்ட் மற்றும் சிரி போலவே தான் இந்த வாட்ஸ் அப் புதிய மைக் செயல்படும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஎஸ்ஓ ஆகிய இரண்டு மீடியம்களிலும் இப்புதிய அப்டேட் இருக்கிறது.
 
வாட்ஸ் அப்பின் புதிய அப்ட்டேட்டில் கீ போர்ட் வரும் போது ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு கீபொர்ட் அருகில் கருப்பு நிற ஐக்கான் இருக்கும். இதுவே ஐஓஎஸ் பயனாளர்கலூக்கு கீ போர்டின் வலது பக்கத்தில் கீழ் ஓரத்தில் இந்த மைக் ஐகான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: