Header Ads

Header ADS

CBSE யில் அடுத்த கல்வியாண்டில் செய்முறை மூலம் கற்கும் திறன்: விருப்ப பாடமாக கொண்டு வர முடிவு



சிபிஎஸ்இ பள்ளிகளில் 8, 9 மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை  மேம்படுத்தசெயல்முறை கற்கும் திறன்என்பதை விருப்ப பாடமாக கொண்டுவர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தொழிற்கல்வி மற்றும் பொதுப்  பாடப்பிரிவின் கீழ் பாடங்களை படித்து வருகின்றனர். இந்த பாடத்திட்டங்கள் அதிக அளவில் இருப்பதால் தற்போது  அவற்றை குறைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும். இந்நிலையில், செய்முறைகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை அல்லது கற்கும் திறனை மேம்படுத்த  முடியுமா என்று சிபிஎஸ்இ ஆலோசித்து, அதை  பாடத்திட்டத்தில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.
 
செயல்முறை கற்கும் திறன் (Artificial Intelligence) என்பது கணினி அறிவியலின் ஒரு பகுதியாக இருக்கும்.  அதாவது, மனிதர்கள் போல செயல்படும் சூப்பர் ரோபோக்களை உருவாக்குவதில் முழு கவனம் செலுத்துவதாக  இருக்கும். எதிர்காலத்தில் மாணவர்களை தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களாக உருவாக்கும் அடிப்படையில் இந்த  முடிவை சிபிஎஸ்இ எடுத்துள்ளது. சிபிஎஸ்இ நிர்வாக குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி 8, 9 மற்றும் பத்தாம் வகுப்பு  பாடத்திட்டத்தில் மேற்கண்ட செயல்முறை கற்கும் திறன் பாடங்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இயின் கீழ் நாடு முழுவதும் 20 ஆயிரத்து 299 பள்ளிகள் இயங்கி வருகின்றன. பிற 25 நாடுகளில் 220  பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், வரும் கல்வி ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில்  அனைத்து பள்ளிகளும் தயாராக இருக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை சிபிஎஸ்இ  வழங்கும் என்றும் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.