தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடமே வழங்கப்படும் கல்வி செயலர் உறுதி*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அதன் மாநில தலைவர் திருமிகு செ. முத்துசாமி Exmlc அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் நேற்று *கல்வித்துறை முதன்மை செயலாளர் திரு.பிரதீப் யாதவ்* அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியபின், 30 .12 .2018 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழுவின் தீர்மானங்கள் அளித்து கோரிக்கைகள் மீது நடவடிக்கை கோரி விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டன.
அப்போது முக்கியமாக அரசாணை 101 வெளிவந்த பிறகு *தொடக்கப்பள்ளி தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இன்று வரை யாருக்கும் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மையை கூறி வேதனைப்பட்டோம்.*
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் இதற்கான அனுமதிக்கும் ஆணையை பெற்றதிலிருந்து *ஏதோ ஒரு காரணம் கூறி அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக உள்ளனர்* என்றும் கூறினார் .
மேலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 6 மாதமாக பத்தாண்டுகள் , .மற்றும் 20 ஆண்டுகள் பணிமுடித்த அதற்குண்டான தேர்வு நிலை சிறப்பு நிலை வழங்கப்படவில்லை.
இதற்கு *அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை வேண்டும்* என்று கூறுவது மேலும் ஒரு காரணம் என்று விளக்கப்பட்டது.
பொறுமையுடன் கேட்ட முதன்மைச் செயலாளர் அவர்கள் *இம்மாத இறுதிக்குள் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம் வட்டார கல்வி அலுவலருக்கு வழங்கப்படும்* என்றும் இது குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் இந்நடவடிக்கைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்
No comments
Post a Comment