நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, January 8, 2019

நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்



நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

சத்யபால் சிங் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது :
ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் முறையின்படி 2016 - 17 ம் ஆண்டில் 92,275 ஆரம்ப மற்றும் துவக்க பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளன. ஆட்சேர்ப்பு, சேவை நிலைகள் மற்றும் மறு ஒழுங்கமைத்தல் முறையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

No comments: