அங்கன்வாடி மையத்தில் நெல்லை கலெக்டரின் மகள்
நெல்லை கலெக்டரின் 3 வயது மகள் அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார்.
தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகள், ‛கிட்ஸ் ஸ்கூல்'களிலோ தான் சேர்க்கின்றனர். பின்தங்கிய பகுதி குழந்தைகள்தான் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகபுதிய பாடத்திட்டங்கள், உணவுமுறைகள், நர்சரி பள்ளியை போல சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இரண்டாவது குழந்தையான 3 வயது கீதாஞ்சலி, ஆயுதப்படை வளாகத்திற்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சககுழந்தைகளுடன் அமர்ந்து படிக்கிறார்
No comments
Post a Comment