Header Ads

Header ADS

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு

Image result for laptop


தமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.
 
வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டதை அரசு கொண்டு வந்துள்ளது. 8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

இனி வரும் காலங்களில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில்ஸ்கில் டிரெய்னிங்எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பள்ளி படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது என்றார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.