Header Ads

Header ADS

மாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு


Related image


பாரதியார் பல்கலையில், பிரிவு,- 'பி' பிஎச்.டி., மாணவர்கள், 7,000 பேர், படிப்பை முடிக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
 
கோவை, பாரதியார் பல்கலையில், 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரிவு-, 'பி' பிஎச்.டி.,யில், நாட்டின் எந்த கல்வி நிறுவனத்தில் இருக்கும் ஒரு பேராசிரியர், முகம் தெரியாத மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். இதில், பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதை தொடர்ந்து, 2015ல், தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கு முன், இப்பிரிவில், பிஎச்.டி.,யில் சேர்ந்த, 7,000 மாணவர்கள், தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 2017 பிப்., 7ம் தேதி முதல், பிரிவு, 'பி' பிஎச்.டி., முடிக்கும் மாணவர்களுக்கு, 'தொலைதுார பகுதி நேர படிப்பு' என சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவதால், வேலைவாய்ப்பும் கிடைக்காத சூழல் எழுந்துள்ளது.

பல்கலை துணைவேந்தர் ஒருங்கிணைப்புகுழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறியதாவது: பிரிவு,- 'பி' பிஎச்.டி., படிக்கும் மாணவர்களை, 'ரெகுலர்' பிரிவுக்கு மாறி படிக்க, வாய்ப்பு வழங்குவது குறித்து, கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி பரிந்துரை கொடுத்துள்ளது. இதை ஆய்வு செய்து, எதிர்வரும், 'சிண்டிகேட்' கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.