ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளையில் காலியாக உள்ள தொழில்நுட்பவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
தொழில் நுட்பவியலாளர் (Technician (Lab)) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள், 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kanyakumari
District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil,
Kanyakumari District - 629003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2019
No comments
Post a Comment