6,000 ஆசிரியருக்கு நோட்டீஸ்! கல்வித்துறை கிடுக்குப்பிடி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, January 25, 2019

6,000 ஆசிரியருக்கு நோட்டீஸ்! கல்வித்துறை கிடுக்குப்பிடி


'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள, 6 ஆயிரம் ஆசிரியருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்,' என, மாவட்ட கல்வித்துறையினர் அறிவித்துள்ளனர்.பல கோரிக்கையை வலியுறுத்தி, 22ம் தேதி முதல் மூன்று நாட்களாக ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கல்வி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாவில் பணிக்கு வராத ஆசிரியர்-குறித்த விபரத்தை சேகரித்துள்ள மாவட்ட கல்வித்துறை, முதல்கட்டமாக, 6 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று முதல், '17பி' நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமித்து கொள்ள அரசு உத்தரவு வழங்கியுள்ள நிலையில், புதிய (தற்காலிக) ஆசிரியர் நியமனம் குறித்து, முதன்மை கல்வி அலுவலகத்தில், கேட்ட போது, 'அரசு தரப்பில் இருந்து இன்னும் மாவட்ட வாரியாக அறிவிப்பு வரவில்லை. வந்தவுடன், ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர்,' என்றனர்

No comments: