2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
🔰🔰🔰
_*2018 -
2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...*_
🔥4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். *[DA Arrear -2, Bonus, surrender,
pay fix arrear if any]*
🔥நிலையான கழிவு *(Standard deduction) ரு.40,000/-* ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.
🔥housing loan பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.*
🔥மாற்றுத்திறன் ஆசிரியர்கள் *தொழில்வரி செலுத்தத் தேவையில்லை.* மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய
போக்குவரத்து பயணப்படியை *Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.*
🔥housing loan - வட்டி அதிகபட்சமாக *Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்*.
🔥housing loan - அசல் தொகையை
*80c ல் கழித்துக் கொள்ளலாம்.*
🔥housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c படிவம் வைக்க வேண்டும்.*
🔥CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய *CPS
தொகையில்
அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.*
🔥School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*
🔥LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. *(LIC Statement பெற்று,
படிவத்துடன் இணைக்கவும்).*
🔥80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
*10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று* பெற்று இணைக்க வேண்டும்.
🔥மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS தொகையை 80D* ல் கழித்துக் கொள்ளலாம்.
🔥கல்விக் கடனுக்காக
இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய *வட்டியை முழுவதும் 80E* ல் கழித்துக் கொள்ளலாம்.
🔥நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் *நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G* ல் கழித்துக் கொள்ளலாம்.
🔥வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 -
5,00,000 : 5%
5,00,001 -
10,00,000 : 20%
🔥வருமான வரியில் *ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம்* செய்ய வேண்டும்.
🔥Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் *ரூ.2500/- ஐ 87A ல்* கழித்துக் கொள்ளலாம்.
🔥Taxable Income மட்டும் *அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க* வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.
🌀🌀🌀
No comments
Post a Comment