TNPSC - குரூப் 2 தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திலேயே இணையதளத்தில் வெளியீடு!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திலேயே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் அடங்கிய தொழில் கூட்டுறவு அதிகாரி, சமூக பாதுகாப்பு துறை பயிற்சி அதிகாரி, வேலை வாய்ப்புதுறை இளநிலை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி அதிகாரி, தொழில்துறை உதவி ஆய்வாளர், சப்-ரிஜிஸ்டிரார்(கிரேடு 2), நகராட்சி ஆணையர்(கிரேடு 2), உதவி பிரிவு அதிகாரி(சட்டத்துறை), உதவி பிரிவு அதிகாரி(நிதித்துறை), தணிக்கை ஆய்வாளர்(இந்து சமய அறநிலையத்துறை), கைத்தறி துறை இன்ஸ்பெக்டர், மூத்த ஆய்வாளர்(கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 23 துறைகளில் காலியாக உள்ள 1,199 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 9ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த நவம்பர் 11ம் தேதி குரூப் 2 தேர்வின் முதல் நிலை நடத்தப்பட்டது. 1199 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 6 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் குரூப் 2 தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திலேயே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடப்பட்டன. பிராதான தேர்வு பிப்ரவரி மாதம் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக குரூப் 2 தேர்வு முடிந்த பிறகு அதன் முடிவுகள் வெளியாக குறைந்தது 3 மாத காலமாகும் என்று புகார் கூறப்படுகிறது. அதை சரி செய்யும் வகையில் தற்போது ஒரே மாதத்தில் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
No comments
Post a Comment