Header Ads

Header ADS

HRA-வீட்டு வாடகைப்படி-திருச்சி மாநகர எல்லையிலிருந்து 16KM க்குள் வருவதால் குளித்தலை ஒன்றிய பகுதி முழுமைக்கும் Grade 1(b) வழங்குதல்





நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்கள் குளித்தலை ஒன்றிய வீட்டு வாடகைப்படி தொடர்பாக எடுத்த முயற்சிக்கு நன்றிகள் 🙏🙏

குளித்தலை நகராட்சி,மருதூர் பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு HRA GRADE 1 (B) வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குளித்தலை கருவூலத்தில் செப்டம்பர் மாதம் முதல் வழங்காமல் AUDITING செய்தனர்.

உடனடியாக அய்யா செ.மு
அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 26.10.2018 அன்று கருவூல முதன்மை செயலாளர் திரு.ஜவஹர் அவர்களை சந்தித்து மனு அளித்தோம்.

நமது இயக்கத்திற்கு வீட்டு வாடகை படி தொடர்பாக பதில் அனுப்பப்பட்டது.அதில் குளித்தலை ஒன்றியம் முழுமைக்கும் வழங்கலாம் எனக் கூறப்பட்டது. அந்த நகலை எடுத்து குளித்தலை கருவூல அலுவலர் அவர்களிடம் கேட்ட போது குளித்தலை நகராட்சி என்று தெளிவுரையில் குறிப்பிடவில்லை என கூறினார்கள்.

மீண்டும் அய்யா செ.மு அவர்களை தொடர்பு கொண்டோம். தற்போது ஜவஹர் அவர்கள் நாகப்பட்டினம் கஜா புயல் நிவாரண பணியில் இருப்பதாகவும்,உதவியாளர்(P.A) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

திரு.ஜவஹர் அவர்கள் சென்னை திரும்பியவுடன் அய்யா செ.மு அவர்கள் மீண்டும் வீட்டுவாடகைப்படி தொடர்பான மீண்டும் தெளிவுரை பெற்று வழங்குமாறு கூறியுள்ளார்.

அய்யா செ.முத்துசாமி EX.MLC அவர்களுக்கும்,கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் நன்றிகள்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.