Flash News : தென் மாவட்டங்களில் உள்ள 4000 உபரி ஆசிரியர்கள் பிற மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்ய ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படிக்கும், 26 ஆயிரம் மாணவர்களுக்கு, 413 மையங்களில், 'நீட்' தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. கடந்த, 2017 - 18ம் கல்வி ஆண்டில், 3,192 மாணவர்களுக்கு, தனியார் நிறுவனமும், தனியார் கல்லுாரிகளும் செலவு செய்து, நீட் பயிற்சியை இலவசமாக வழங்கின. அரசு, ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.தமிழகத்தில், 33 அரசு பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை; 1,334 பள்ளிகளில், ஒன்பதுக்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.
எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அறிக்கை விடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இதுபோன்ற அரசு பள்ளிகளை நடத்த ஆலோசனை அளித்தால், ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்
No comments
Post a Comment