ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கல்வி அமைச்சர் பேச்சு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 17, 2018

ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கல்வி அமைச்சர் பேச்சு



திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கப்படும்

மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள 671 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத்திறனை வளர்க்கும் வகையில் விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது
 
பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படும்போது, கவனிக்காமல் விட்டு விட்டால் அதனை யூடியூப் மூலம் மொபைலில் டவுன்லோடு செய்து வீட்டில் கற்றுக்கொள்ளும் வகையில் வசதி செய்து தரப்படும். கணினிக்கல்வி. தமிழகத்தில் வரும் ஜனவரி 3வது வாரத்துக்குள் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 51 ஆயிரம் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்

No comments: