Header Ads

Header ADS

முன் அனுமதி பெறாமலும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை : பள்ளிக் கல்வித்துறை



முன் அனுமதி பெறாமலும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்விச் செயலகம் அனுப்பிய அவசர சுற்றறிக்கை:
வேலையை செய்யாதவர்களுக்கு  அனுமதியின்றி விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் ஒழுங்கீன ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மீது காலதாமதம் இன்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், வேலையே செய்யாதவர்களுக்கு அரசின் இழப்பீடு வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே, வேலைக்கு வராதவர்கள் மீது, பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விதிகளின்படியே ஓய்வூதியம்: இந்த சுற்றறிக்கையில், முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி விடுப்பு எடுக்கும்போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.