Header Ads

Header ADS

பேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்!!



வாட்ஸ்ஆப்பில் வரவிருக்கும் டார்க மோட்டால்
அதனை பயன்படுத்துவது எளிதாக மாற உள்ளது. மேலும் இதனால் வழக்கத்தை விட குறைவான அளவில் பேட்டரி பவர் குறையும்.

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவது மேலும் எளிதாகி உள்ளது.


இந்நிலையில் தற்போது புதிய வசதி ஒன்று வாட்ஸ்ஆப்பில் வர உள்ளது. டார்க் மோட் என கூறப்படும் இந்த அப்டேட்டால் வாட்ஸ்ஆப்பில் முக்கியமான வசதிகள் வர உள்ளன. இந்த வசதி தற்போது விண்டோஸ் 10 கணினி மற்றும் நோட்புக்குகளில் வந்துள்ளன. மேலும் ஐஓஎஸ் 10 கொண்ட ஐபோன்களில் இந்த வசதியை பெற முடியும்.

மற்ற டிவைஸ்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. டார்க் மோட்டில் வாட்ஸ்ஆப் இருக்கும் போது வழக்கத்தை விட குறைவான பவரை எடுத்துக்கொள்கிறது. மேலும் வாட்ஸ்ஆப் பேக்ரவுண்ட்டில் அடர்த்தியான வண்ணங்கள் இருப்பதால்  பார்ப்பதற்கு புது லுக்கும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.