Header Ads

Header ADS

வீடு தேடிவரும் ஆதார் பதிவு செய்யும் வசதி! தமிழக முதல்வரால் தொடக்கம்!



5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

 ரூ.13 கோடியே 61 லட்சம் செலவில் 1302 ஆதார் கிட் வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கினார்.மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆதாரை பதிவு செய்ய குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதியை ஏற்படுத்தி உள்ளார்.
 
இந்த திட்டத்திற்காக 13கோடியே 61இலட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் ஆகியன வாங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவரவர் வீடுகளுக்கே அதிகாரிகள் நேரில் சென்று ஆதார் எண் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.