ஆதாரை ஒப்படைக்க வசதி அறிமுகப்படுத்த அரசு முடிவு
ஆதார் எண்ணை அரசிடம் ஒப்படைத்து, தங்களை பற்றிய தகவல்களை நீக்கும்படி, பொதுமக்கள் கோரும் வசதியை, விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
ஆதார்,ஒப்படைக்க,வசதி,அறிமுகப்படுத்த,அரசு,முடிவு
தகவல்கள் :
ஆதார் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதில், 'அரசு தொடர்பான பணிகள், மானியங்கள் பெறுவது போன்றவற்றுக்கு மட்டுமே, ஆதாரை
கட்டாயமாக்க வேண்டும். 'மொபைல் போன் இணைப்பு, வங்கிக் கணக்கு துவக்குவது போன்ற தனியார் அளிக்கும் சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமில்லை' என, கூறப்பட்டது.
இதற்கிடையே, ஆதார் எண்ணால், தங்களை பற்றிய தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிவதாகவும், தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இதையடுத்து, ஏற்கனவே ஆதார் எண்ணை பெற்றவர்கள், அதை அரசிடம் ஒப்படைத்து, தங்கள் தகவல்களை நீக்கும்படி கோரும் வசதியை அளிப்பது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது
தொடர்பாக, சட்ட அமைச்சகம், தன் பரிந்துரையை அளித்துள்ளது. அதனால், விரைவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'பான் கார்டு' :
அதே
நேரத்தில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான் கார்டு' பெறுவதற்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஆதார் கட்டாயம் என்பதால், பான் கார்டு பெற்றவர்கள், தங்கள் ஆதாரை திருப்பித் தர முடியாது.அதேபோல், அரசு அளிக்கும் மானியம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என்பதால், ஆதாரை திருப்பித் தந்தால், இந்த வசதிகள் கிடைக்காது.
No comments
Post a Comment