Header Ads

Header ADS

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம்



பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.'நொறுக்கு தீனி, மதிய உணவுபோன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது.

மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.