ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம்: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, December 28, 2018

ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம்: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை



தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் அடிப்படையில் அனைத்து வகை நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ஊதியமாக 5 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
 
மேற்கண்ட சிறப்பு ஆசிரியர்களில் தற்போது 12 ஆயிரம் பேர்தான் பணியாற்றி வருகிறோம். இந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இதுவரை 2700 வரை உயர்த்தினர். தற்போது 7700 பெற்று வருகிறோம். இந்த ஊதிய உயர்வை 11 ஆண்டுகளுக்கு 10 சதவீதம் என்று கணக்கிட்டாலே தற்போது 11 ஆயிரம் வரை பெற்றிருக்க முடியும்.
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உள்ளிட்ட ஊதிய உயர்வுகள் வழங்கும்போது, தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு  ஆண்டு ஊதிய உயர்வை வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.


தமிழக அரசு 7வது ஊதியக் குழு அரசாணை வெளியிட்டும் இதுவரை அரசின் திட்ட வேலையில் எங்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, முதல்வர் இதுகுறித்து ஆய்வு செய்து அரசியல் அமைப்பு சட்டம் 141ன்படி, பகுதி நேர ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக்கால தீர்வாக, மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான 18 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: