தொலைந்துபோன டெபிட் கார்டை தடை எப்படி செய்வது?*
இன்று நமது பணப் பரிவர்த்தனைக்கு பிரதான கருவியாக 'டெபிட் கார்டு' உள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, இணைய தளம் வாயிலாக பணப் பரிமாற்றம் செய்வது போன்ற வங்கிச் சேவைகளை டெபிட் கார்டு மிகச் சுலபமாக்கிவிட்டது.
இந்நிலையில், வங்கி டெபிட் கார்டை தொலைக்க நேர்ந்தால், தடுமாறிப் போய்விடுவோம். வங்கியில் இருந்து உங்களது புதிய டெபிட் கார்டை பெறுவதற்கு முன்பு, தொலைந்த அட்டையை 'பிளாக்', அதாவது தடைசெய்வது சற்றுக் கடினமான செயல்.
உங்களது டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்றால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, தொலைபேசியில் காத்திருக்கும் நேரம் மற்றும் வங்கிக் கணக்கு எண், டெபிட் கார்டு தொலைந்ததற்கான காரணம், முகவரி போன்ற தகவல்களைத் தருவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் நம்மைப் பொறுமையிழக்க வைக்கும்.
இதற்கு மாற்றாக, தொலைந்துபோன டெபிட் கார்டை தடைசெய்ய, நெட் பேங்கிங் எனப்படும் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்தலாம். இம்முறையை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே பார்ப்போம்.
உங்களது 'யூசர் ஐடி' மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி இணைய வங்கிக்கணக்கில் உள்நுழையுங்கள். 'ஈ- சர்வீசஸ்' எனும் பிரிவில், ஏடிஎம் கார்டு சேவைகள் என்பதற்குக் கீழே 'பிளாக் ஏடிஎம் கார்டு' என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
பின்னர் எந்த வங்கிக்கணக்குக்கான டெபிட் கார்டை பிளாக் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்களின் ஏடிஎம் கார்டு எண்ணின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். அத்துடன் செயல்பாட்டில் உள்ள, தடை செய்யப்பட்ட அனைத்து டெபிட் கார்டுகளும் காண்பிக்கப்படும். நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டை தேர்வு செய்து, அதைச் சரிபார்த்த பின்னர் சமர்ப்பிக்கவும்.
அதை
உறுதிசெய்யும் வகையில், வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி எனும் அங்கீகாரத்தை தேர்வு செய்யவும். வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு அல்லது குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் ஓடிபி-ஐ என்டர் செய்த பின்னர், அதை உறுதி செய்ய (கன்பர்ம்) வேண்டும்.
கடைசியாக ஏடிஎம் கார்டை பிளாக் செய்யக்கோரும் உங்களின் சேவை கோரிக்கையை வெற்றிகரமாகச் சமர்பித்த பின்னர் வழங்கப்படும் சேவை எண்ணை, எதிர்கால தேவைக்காகவும் மீண்டும் அதுதொடர்பாக விளக்கங்களை வங்கியில் கோரவும் குறித்து வைத்துக்கொள்ளவும்.
டெபிட் கார்டை பிளாக் செய்வதற்கான சேவை எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, வங்கிக்குச் சென்று அந்த எண்ணை வழங்கி புதிய டெபிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். அந்தச் சமயத்தில் வங்கிகள் உடனடியாக கையில் டெபிட் கார்டை உங்களுக்கு வழங்கும். அது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் அல்லது அதிகபட்சமாக 2 வேலை நாட்களுக்குள் செயல்பட ஆரம்பிக்கும்.
No comments
Post a Comment