லஞ்ச புகார் - BEO கைது - 4 ஆண்டு சிறை: 4 ஆயிரம் அபராதம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, December 7, 2018

லஞ்ச புகார் - BEO கைது - 4 ஆண்டு சிறை: 4 ஆயிரம் அபராதம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


Image result for court judgement


அரசு நிதியுதவி பள்ளி மோசடிக்கு உடந்தையாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் கடந்த 2015ல் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் அப்துல்ஹக் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 2012 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக  கணக்கில் காட்டி, தலைமை ஆசிரியர் அரசு நிதியுதவி பெற்று  மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
விசாரணையில், வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை(47) இதற்கு உடந்தையாக  இருந்ததும் ெதரிந்தது. புகாரின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2015 ஆகஸ்ட் 27ல் வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரி விசாரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதைக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இதையடுத்து பூங்கோதை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஊழல் வழக்கு பதிவையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்என்றனர்.
No automatic alt text available.

No comments: