`ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள்' - மெரினா போராட்டத்தை நினைவுபடுத்திய ஆசிரியர்கள் போராட்டம்! Vikatan Exculsive
ஊதிய
முரண்பாடுகளைக் களைய கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம்
தொடக்கக் கல்வித்துறையில் கடந்த 2009 -ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம்பளத்தில் முரண்பாடு நீட்டிக்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் எனத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் ஆசிரியர்கள். அதன்படி இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இதற்காக ஆசிரியர்கள் சென்னையில் குவிந்தனர்.
போராட்டம்
லேட்டஸ்ட் அப்டேட்
`ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள்' - மெரினா போராட்டத்தை நினைவுபடுத்திய ஆசிரியர்கள் போராட்டம்!
அங்கு திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜரத்னம்
இரவு
நேரம் என்பதால், அனைவரும் மெரினாவில் போராடியதைப் போல் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் `உண்ணவும் மாட்டோம்; உறங்கவும் மாட்டோம்' என்ற முழக்கத்தை முன்வைத்து ஆசிரியர்கள் ஸ்டேடியத்திலேயே போராடி வருகின்றனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது.
No comments
Post a Comment