*கடந்த 2018- ஏப்ரல் மாதம் நடைபெற்ற நான்கு நாட்கள் உண்ணா விரத போராட்டம் வெற்றியா? தோல்வியா? அரசின் எழுதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையா...??ஓர் அலசல்...!!*
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊
*அதன் பின்பும் நாம் ஒற்றை கோரிக்கையை விடாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்த நிலையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.அதனை கண்ட அரசு மூன்றாம் நாள் இரவே உங்களது கோரிக்கை நிறைவேற்றுவதற்காக அரசு முழு முயற்சியுடன் களமிறங்கியுள்ளது ,உங்களது கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது அரசாணை உடனடியாக பிறப்பித்தால் பல்வேறு பிரிவினர் அரசினை நடத்த முடியாதபடி போராட்டங்களை நடத்திடுவர்.எனவே ஒரு நபர் ஊதிக்குழுவில் முடித்து தருகிறோம் என்றனர் மேலும் கோரிக்கை முடிவடைந்தது தெரியாமல் தொடர்ந்து போராடி அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால் உங்களது கோரிக்கையும் நீர்த்துப் போய்விடும் ,ஆகவே ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றியும் பெற்று தொடர்ந்து போராடி உங்களது கோரிக்கைகளை நீங்களே அழித்து விடாதீர்கள் என்று கூறினார்.*
*நாம் மற்ற மாவட்ட/ வட்டார பொறுப்பாளர்களை கலந்து பேசி விட்டு முடிவு சொல்கிறோம் என்று கூறிவிட்டு மூன்றாம் நாள் பேச்சுவார்த்தை நள்ளிரவு முடித்துவிட்டு வந்தோம். நமது போராட்டத்தின் எழுச்சி கண்ட அரசியல் தலைவர்கள் நமது போர் களத்திற்கு நேரடியாக வந்து போராட்டம் நடத்துவது என்ற எப்படி என்பதை ஆசிரியர்களாகிய நீங்கள் எங்களுக்கு கற்றுத் தருகின்றனர் என்று புகழாரம் சூட்டினர். இது போன்ற மனவலிமையான போராட்டங்களை நாங்கள் கூட நடத்தியது கிடையாது என வாழ்த்தினர்.*
💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
*போராட்டத்தின் உறுதி கண்ட நமது சகோதர அமைப்புகளும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். நான்காம் நாள் போராட்டத்தை இறுதி முடிவிற்கு கொண்டு செல்வதற்கு நமது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெரும் முயற்சி எடுத்து ஒரு நபரை ஊதியக்குழுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி நமது ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்தனர்.*
☹☹☹☹☹☹☹☹☹☹☹
*அப்பொழுது சரி இப்போதும் சரி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பெருத்த சந்தேகம் எழுந்தது ??? ஏன் இப்போதும் அந்த சந்தேகம் தொடர்கிறது...???*
😱😱😱😱😱😱😱😱😱😱😱
*போராட்டக் களத்தில் நாம் மிரட்டப்பட்டோமா ? அல்லது நமது மூத்த சங்வாதிகள் கூறும் வண்ணம் ஆடி கார் ஸ்கார்பியோ கார் போன்றவற்றை வாங்கி அரசிடம் விலை போய் விட்டோமா என்று...??*
👺👺👺👺👺👺👺👺👺👺
*விலை போய் இருந்தால் இப்போது அளித்த மரணப்போராட்டத்தினை அறிவிக்க தைரியம் இருக்குமா...??*
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
*அதன்பின்பு ஒரு நபர் ஊதியக்குழு அனைத்து இயக்கங்களையும் அழைத்து கருத்துகளை கேட்டது நமக்கு இயக்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.பல ஆசிரியர் அமைப்புகளும் அரசு அலுவலர் அமைப்புகளும் கூட்ட அரங்கில் கூடியிருந்த பொழுதும் மொத்தம் மூன்று மணி நேரம் கூட்டத்தில் நமது தரப்பிற்கும் மட்டுமே ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலாக நமது கருத்துகளை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்க வாய்ப்புகள் வழங்கி ஆதாரங்கள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டார், குழுவின் தலைவர் திரு.சித்திக் அவர்கள்.*
😾😾😾😾😿😿😿😿😿😿
*கால நீட்டிப்பு தொடர்ந்து செய்து வந்ததால் நாமும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு தள்ளப்பட்டோம்.அதே நேரம் ஜாக்டோ ஜியோ அமைப்பும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு இருந்தது .அப்பொழுது அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மதிப்பிற்குரிய கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. சண்முகம் அவர்களும் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் 7 அம்ச கோரிக்கைகளை கேட்கும்பொழுது இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடியாது .ஆனால் 2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் கோரிக்கை நியாயமானது அதற்காக முன்னரே பரிந்துரைக் கடிதம் அனுப்பி உள்ளோம் ஒரு நபர் ஊதியக்குழு பரிசீலனை செய்து அறிக்கை வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நேரடியாகவே அனைத்து இயக்கங்களுக்கும் முன்னரே அறிவித்துள்ளார்.தற்போது கூட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் வாதிட்ட போது நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களிடம் கலந்து பேசிதான் 21 மாத நிலுவைத்தொகை குறித்த அறிக்கை கொடுக்க முடியும் என்று கூறினர் .இதிலிருந்தே தெரிய வேண்டாமா தமிழகத்தின் நிதித்துறை சார்ந்த அனைத்தும் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முழு அதிகாரம் உள்ளவர் அவர்தான் என்று ...!அவருடைய வாயிலேயே நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.அப்போதே நாம் வெற்றி பெற்று விட்டோம்,ஆனால் நமது சகோதர அமைப்புகளின் ஆதித அன்பால் அது கூட மறைக்கப்பட்டது.அதன்பின்னர் நம்மால் வெளிக்கொணரபட்டது.*
*அடுத்ததாக நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை 6.12.2018 அன்று நேரில் சந்தித்து நமது காலவரையற்ற போராட்டம் குறித்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது.அவர்கள் ஒரு நபர் ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படும் அதற்காக முதலமைச்சர் வரை நாங்கள் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.*
*அதேபோல அடுத்த நாளே 7.12.2018 அன்று ஒரு புதிய குழு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல்கள் ஊடகங்கள் மூலமாக வெளியாகின.அதற்கு அடுத்தநாள் நமது வெற்றி முழுவதும் உறுதி செய்யப்பட்டிருந்தது 8.12.2018 மாலை 2 மணிக்கு மேல் அனைத்து ஊடகங்களிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து ஒரு நபர் ஊதியக் குழு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்ற தகவல்😄😄😄😄😄😄😄 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலமாக வெளியிடப்பட்டது.*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
*இதிலேயே தெரிந்துகொள்ள வேண்டாமா ....???*
💯💯💯💯💯💯💯💯💯💯
*நமது கோரிக்கை நூறு சதவீதம் 100% முடிந்துவிட்டது என்று....!!*
*அடுத்த கட்ட எந்தவித கடுமையான போராட்டத்தை மேற்கொள்ளாமலேயே நமது கோரிக்கை நிறைவேறி விட்டது.நண்பர்களே துளியும் சந்தேகம் வேண்டாம் நான்கு நாட்கள் போராட்டம் நூற்றுக்கு நூறு சதவீதம் முழு வெற்றி...!!*
💯%💯%💯%
*அனைத்தும் நேர்த்தியாக சென்றுகொண்டிருந்த வேளையில் விரைவில் ஊதிய மாற்ற அரசாணை வெளிவரும் என்றிருந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தேவை இல்லாமல் ஒரு நபர் ஊதிய குழுவில் நிலுவைத் தொகையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று மேலும் ஒரு மாத கால நீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவ்வாறு அரசுக்கு அதிக நிதி நெருக்கடி ஏற்படும் பொழுது பெரிய தொகையை அரசு நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு நமது கோரிக்கை மற்றும் இன்னும் சில பல கோரிக்கைகளை அரசு நீர்த்துப் போகச் செய்து விடும் என்ற காரணத்தினால் தான் காலவரையற்ற உயிர் நீர் அருந்த மரணப் போராட்டத்தை நாம் அறிவித்துள்ளோம்.*
*உறுதிசெய்யப்பட்ட வெற்றி ...!!*
*இறுதி செய்யப்பட்ட வெற்றி...!!*
*தடம் மாறாமல் தடுமாறாமல் நம் கரங்களில் பெறுவதற்காக இந்த போராட்டம் நண்பர்களே...!!*
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
*ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையெனில் அத்தனை பேருக்கும் தாழ்வு என்பதை அறிந்த அறிவார்ந்த ஆசிரிய பெருமக்கள் உணர்ந்து இப்போராட்டத்தை முழுவதுமாக பங்கெடுக்கும் செய்து வெற்றி என்ற அரசாணையை பெற்று நாம் அரியணை திரும்புவோம்...!!*
*இல்லையேல் உயிர்நீரும் அருந்தாமல் தமிழக சிறை💂♂💂♂💂♂💂♂💂♂💂♂ சாலைகளை நிரப்புவோம்....!!*
*வெற்றி என்பது எளிதல்ல...*
*அதை விட்டுவிடும் எண்ணம் நமகில்லை...*
நன்றி
_தகவல் பகிர்வு_
*மாநிலத் தலைமை*
*2009&TET
போராட்டக்குழு*
No comments
Post a Comment