Header Ads

Header ADS

*2009&TET- போர் அறிவிப்பு-டிசம்பர் 23 படைகள் தயாராகட்டும் நீதி பிறக்கட்டும்





*2009&TET போராளிகளுக்கு வீரம் செறிந்த வீர வணக்கங்கள்* 

*போர் அறிவிப்பு-டிசம்பர் 23 படைகள் தயாராகட்டும்*
 
*இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் 21 மாத நிலுவை தொகை பெறுவது முக்கிய கோரிக்கையாக இருந்தது CPS குறித்தும் பெரிதாக பேசப்படவில்லை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்றோ அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை அதிக நிமிடங்கள் 21 மாத நிலுவைத்தொகை குறித்த விவாதங்கள் இடம் பெற்றதாக தெரிகிறது, நீதிமன்றமும் 21 மாத நிலுவைத்தொகை கொடுப்பதற்காக சாத்திய கூறுகளை  ஆராய்ந்து 30.11.2018 ல் முடிவடைந்த திரு.சித்திக் அவர்கள் தலைமையிலான ஒரு நபர் ஊதிய குழுவில் மீண்டும் கால அவகாசம் அளித்து 21 மாத நிலுவைத்தொகை கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து 7.1.2019 நீதிமன்றத்தில் வழங்குமாறு நீதி அரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.*
 
*தற்போதைய நிலையில் நமது ஒற்றை கோரிக்கை குறித்து அமைதியாக இருந்தால் அரசு 21 மாத கால அறிக்கையை கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை மட்டும் அலசி ஆராய்ந்து ஜனவரியில் 7 ல்  நீதிமன்றத்தில் அதற்கான வழியை மட்டுமே குறிப்பிட்டு விட்டு நம்மை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிவிடும்.*

*எனவே நாம் முன்னரே திட்டமிட்டு இருந்தது போல டிசம்பர்- 23 ஆம் தேதி முதல் குடும்பத்துடன் கூடிய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால் மட்டுமே போராட்டத்தினை நடத்தும் போது அல்லது ஜனவரி ஏழாம் தேதி நமக்கு ஊதிய முரண்பாடுகளை களையப்பட்டது என்ற அரசாணையை தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அப்படி இல்லை எனில் அரசு நம்மை மறந்து  நமது கோரிக்கையை கைவிட்டு விடும் மீண்டும் நல்லபடியாக முடிந்த நமது ஊதிய முரண்பாடு தொடர் கதையாகி விடும்.*

 
*இதை இனி ஏற்றுக் கொள்ளவே முடியாது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசுக்கு மீண்டும் ஒருமுறை காட்டிடுவோம் அரசாணை பெறும்வரை நாம் விடப்போவதில்லை திட்டமிட்டபடி நமது போர்க்களத்தை ஆயத்தப்படுத்துங்கள் போர்ப்படைகள் தயாராகட்டும் மனதில் கொதிக்கும் எரிமலையை 🌋🌋🌋🌋🌋🌋🌋 டிசம்பர்- 23 சென்னையில் கொட்டிடுவோம்  குலுங்கட்டும் சென்னை மீண்டும் ஒருமுறை.*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜


*நமக்கு நீதி பிறக்கட்டும்*

👺👺👺👺👺👺👺👺👺👺👺
இவண்
*ஜே.ராபர்ட்*
*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*
No automatic alt text available.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.