2009&TET போராட்டக்குழுவினை அரசு இன்று (22.12.2018 ) மதியம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*2009&TET
போராளிகளுக்கு போராட்ட கால வீர வணக்கங்கள்...*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*நமது போர் அறிவிப்பு கடந்த 25.11.2018 அன்று திருச்சி மாநகரில்
அறிவிக்கப்பட்டது. அறிவித்த நாள் முதலே காவல்துறையினர் மிகுந்த சிரத்தையோடு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நாமும் 6.12.2018 அன்று மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கல்வித்துறை செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து நமது போராட்ட அறிவிப்புகளை தெரிவித்தோம். அதுமுதற்கொண்டு அரசு மீண்டும் மீண்டும் கால தாமதப்படுத்துவதால் நாம் திட்டமிட்டபடி "டிசம்பர் 23
முதல் குடும்பத்துடன் மீண்டும் உயிர்நீரே அருந்தாத காலவரையற்ற மரணப் போராட்டத்தை" அறிவித்து உள்ளோம்.*
👨👧👧👨👦👦👩👧👧👩👧👦👨👨👧👧👬👭👫🙎♂🙎♀
*நமது போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டுவருவகாவல்துறையினரிடமிருந்து பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன . கடந்த 17.12.2018 உதவி காவல்துறை ஆணையாளர் அவர்கள் தலைமையில் நமது சென்னை திருவள்ளூர் பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்த முடிவும் எட்டப்படவில்லை.*
👮♂👲💂♀👮♂👲💂♀👮♂👲💂♀👮♂👲
*அதன்பின்னர் 19.12.2018 துணை காவல்துறை ஆணையாளர் (Dy. Commissioner) அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*மீண்டும் இன்று 21.12.2018 தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்பிற்குரிய முனைவர் கருப்புசாமி அவர்கள் தொலைபேசியில் மாநில பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு இந்த போராட்டத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வையுங்கள்,
அரசு அதன் பின்னர் முடிவுகளை அறிவிக்கும். அதற்கு பின்னர் முடிவு எட்டப்படாவிட்டால் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் நடத்தலாம்... என ஆலோசனை கூறினார்.
நாம் அதற்கு " 10 ஆண்டுகள் நாங்கள் பொறுத்து விட்டோம் ; மேலும் கடந்த போராட்டம் நடந்து முடிந்து எட்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது,
பலமுறை மனுக்களை அளித்து விட்டோம்,
ஆனால் எந்த முடிவும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போராட வேண்டிய கட்டாயத்தில் அரசு எங்களை தள்ளி இருக்கிறது" என்று மிகத்தெளிவாகவே எடுத்துரைத்தும் அவர் "கல்வித்துறை அமைச்சர் சார்பாக இந்த கோரிக்கையை நான் உங்களிடம் முன் வைக்கிறேன்" என்று கூறினார்.*
👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨👁🗨
*நமது தரப்பில் "அரசாணையை நாங்கள் பார்க்கும் வரை எங்களுடைய போராட்டம் தள்ளிவைக்க முடியாது " என்று தெளிவாக கூறி விட்டோம்.
பல்வேறு தரப்பினருக்கு இடைப்பட்ட காலத்தில் அரசு ஆணை பிறப்பிக்கின்றதே... பின் எங்களுக்கு மட்டும் பிறப்பிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது . "இனிமேல் நாங்கள் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று தெளிவாகவே கூறி விட்டோம் . அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.*
😐😐😐😐😐😐😐😐😐😐😐
*பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் நாளை காலை மதிப்புமிகு கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்கின்றோம்,
உங்களுடைய கருத்துக்களை அவர்களிடத்தில் எடுத்துரையுங்கள்.
காவல்துறையை பொருத்தவரை நீங்கள் போராட்டம் நடத்தாமல் உங்களுக்கு நல்ல ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே என்று அவர்களது தரப்பில் முழுமுயற்சியோடு நடவடிக்கையும் எடுத்து கொண்டுள்ளனர்.
அதனை ஏற்று நாளை காலை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமை செயலகத்திற்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகின்றோம்.*
*" எத்தனை கட்ட பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாம் அரசாணையை கண்ணில் பார்க்காமல் நமது போராட்டம் ஓயாது நண்பர்களே.." போர்க்களத்திற்கு திட்டமிட்டபடி ஆயத்தம் செய்யுங்கள் . என்ன நடந்தாலும் இம்முறை வெற்றி
அரசாணையை பார்த்து தான் வீடு திரும்ப வேண்டும்.*
*வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்...*
*எங்கும் ஓடி ஒளியவும் மாட்டோம்...!!*
💪💪💪💪💪💪💪💪💪💪💪
✒✒செய்தி பகிர்வு
*ஜே.ராபர்ட்*
*2009&TET
போராட்டக்குழு*
No comments
Post a Comment