10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா??? போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு அறிக்கைதான்...
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடினை களைய வலியுறுத்தி கடந்த 10 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு அறிக்கைதான்...
அந்த ஒரு நபர் குழு அறிக்கையில் கூறப்பட்ட (திரு.ராஜுவ் ரஞ்சன்) உண்மைக்கு புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்களே இந்த 9 ஆண்டுகளாக நடெபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு மூலக் காரணமே...
இடைநிலை ஆசிரியர்களோட கல்வித்தகுதியே என்னவென்று தெரியாமல் 12 ம் வகுப்பு படிக்கவில்லை, கிராமப் புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைகள் குறைவுதான் அவர்களுக்கு 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சமர்ப்பித்த அந்த ஒரு நபர் குழு அறிக்கையே 21000 இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வினை கேள்விக் குறியாக்கி விட்டுச் சென்றது.....
ஐயா IAS, அமைச்சர், முதல்வர் அவர்களே
நீங்கள் சரியான காரணத்தைக் கூறி இதனைவிட குறைவான ஊதியத்தை வழங்கினால் கூட
சிறப்பாக பணிபுரிய காத்திருக்கின்றோம்...
ஆனால், ஒரு பணிக்கு என்ன தகுதியென்றே தெரியாமல் பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி அவர்களின் உரிமையை பறித்திருப்பது நியாயம்தானா???
10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா???
No comments
Post a Comment