ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் சூழல் உள்ளிட்டவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவில் புகார்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இதனை அவசர வழக்காக பிற்பகல் 1 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.
No comments
Post a Comment