TNPSC - குரூப் 2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு டிஎன்பிஎஸ்சி வருத்தம்!
குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என
தமிழகம் முழுவதும் குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் எனப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 1,199 பணியிடங்களுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்திருந்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 2,268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வைக் கண்காணிக்கும் பணியில் 31,349 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வு வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment