Header Ads

Header ADS

TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்



குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர். மேலும், இதற்கான கால அவகாசம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்குள்
வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஒவ்வொரு முறையும் உத்தேச விடைகளை மறுக்கும் வாய்ப்பானது அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே வழங்கப்படும்.
அதாவது, உத்தேச விடைகளை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
 
இந்த நடைமுறைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை எத்தனை பேர்: தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக இணையதள வசதியை (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ற்ங்ஸ்ரீட்) டி.என்.பி.எஸ்.சி. உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். (பெயர், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வுப் பாடத்தின் பெயர், வினா எண்). இத்துடன், தேர்வர்கள் குறிப்பிடும் விடையையும், அதற்கான ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாரமாகக் குறிப்பிடும் புத்தகத்தின் தலைப்பு, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பாளர் பெயர், புத்தகப் பதிப்பின் ஆண்டு, பதிப்பு எண், பக்க எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியைப் பயன்படுத்தி இதுவரை 900 பேர் வரை உத்தேச விடைகளை மறுத்து செய்துள்ளனர். உத்தேச விடைகளை மறுப்பதற்கான வாய்ப்புக்கு வரும் 20-ஆம் தேதி கடைசி என டி.என்.பி.எஸ்.சி., ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வினை 6 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் இதுவரை 900 பேர் மட்டுமே உத்தேச விடைகளை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில் மேலும் சிலர் உத்தேச விடைகளை மறுத்து ஆதாரங்களுடன் மனு செய்வார்கள் எனத் தெரிகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.