School Morning Prayer Activities - 20.11.2018
திருக்குறள் 89:-
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
விளக்கம் :-
உடம்பின் அகத்து உறுப்பாகிய
அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து
உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
பழமொழி :-
A rotten case abides no handling.
அழுகிய முட்டையை அடைகாக்க வேண்டுமா?
பொன்மொழி:
கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சமம்.
- லால் பகதூர் சாஸ்திரி
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம்
தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு:
1. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
ஹோவாங்கோ ஆறு
2. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்ஷர்
நீதிக்கதை:
நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும்
நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ
முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய
வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
"முயலே நில்!'' என்றது ஆமை.
முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?''
என்று கேட்டது நத்தை.
"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில்
கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு,
முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால்,
என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா...
அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக்
கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும்
ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும்
முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப்
பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக்
கொண்டு, உயிர் பிழைத்தன.
ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும்,
நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.
தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது
என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி
கூறின.
இன்றைய செய்திகள்-20.11.18
*புயல் நிவாரணம்; ரூ.1000 கோடி ஒதுக்கினார் முதல்வர்
*புயல் பாதித்த பகுதிகளில் 21ம் தேதி கவர்னர் ஆய்வு
*டிச.,
4-ல் ஸ்டிரைக் ஜாக்டோ ஜியோ முடிவு
*புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த நவ.,30 வரை அவகாசம்
*கஜா
புயலுக்கு ஒரு நாள் ஊதியம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
*புயலால் சேதமடைந்த பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்: கே.ஏ. செங்கோட்டையன்
*ஹார்ட் பீட்டை ஏற்றி, நகத்தை கடிக்க வைத்த டெஸ்ட் போட்டி.. வெறும் 4 ரன்களில் பாகிஸ்தான் யை வீழ்த்தி
நியூசிலாந்து கிடைத்த வெற்றி
No comments
Post a Comment