School Morning Prayer Activities - 14.11.2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
பழமொழி :
Do into
others as you would be done by
தன்னுயிர் போல் மன்னுயிர் நினை
பொன்மொழி:
கடவுள்
எல்லா இடங்களிலும்
இருக்க முடியாது.
அதனால்தான் அவர்
அன்னைமார்களைப் படைத்தார்.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது
அறிவு :
1.ஏரிகளின் நகரம்?
ஸ்காட்லாந்து
2.தீவுகளின் நகரம்?
மும்பை
நீதிக்கதை
தந்திர நரி
ஒரு
அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது.
சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.
இதை
பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது.
தன்
தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.
தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.
நரி
மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.
இன்றைய செய்தி துளிகள்:
1.10, 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.
2.பொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு
3.கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்
4.கஜா புயல் காரணமாக நவம்பர் 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்
5.ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்
No comments
Post a Comment