Header Ads

Header ADS

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் தகவல்களை பதிவேற்றுவதில் சிக்கல் பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா?


எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் NMMS EXAM எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்
தொகைத் திட்டம் தேர்வு நடைபெறுகிறது.

சமீபத்தில் 2017-18 ல் நடைபெற்ற NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை பள்ளி அளவில் பதிவேற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது ஆனால் 31க்குள் இணையதளம் சரிவர இயங்காததாலும்,  பல்வேறு மாவட்டங்களில் சில பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றினாலும் அதில் submit என்ற ஆப்ஷன் வராததாலும் அவர்களுடைய விண்ணப்பமானது SAVE & DRAFT நிலையில் தங்கி நிற்கிறது. சில விண்ணப்பங்களில் கல்வித் தொகை பெறுவதற்கான scheme option open ஆகவில்லை.
Image result for nmms
மேற்கண்ட காரணங்களால் மாணவர்களுடைய விண்ணப்பமானது மாவட்ட அளவில் FORWARD செய்யமுடியாமல் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆனது பூர்த்தி செய்ய முடியாமல் கல்வி உதவித்தொகை பெறுவது சிக்கலாகி உள்ளது.
 பள்ளி அளவில் மாணவர்களின் தகவல் உள்ளீடு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31 முடிந்துவிட்டதால் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் தகவல்களை உள்ளீடு செய்வது எவ்வாறு என்று  திணறி வருகிறார்கள்.
 
ஆனால் இதைப் பற்றி தகவல்களை பல்வேறு மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகங்களில் எடுத்துக்கூறியும் எந்த ஒரு தெளிவான தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

NMMS தேர்வில் தேர்வாகிய மாணவர்களின் பட்டியலை மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் ஃபார்வர்டு செய்வதற்கு இந்த மாதம் 15ம் தேதி இறுதி நாள் என்பதால் அவர்களுடைய ஊக்கத்தொகை கிடைக்குமா??? இதனை பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளுமா???
 
மேற்கண்ட பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் தீர்த்து மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் அளவில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.