Header Ads

Header ADS

அடிப்படை விதிகள் அறிவோம் - CPS MISSING CREDIT- விளக்கம்!



missing credit என்று குறிப்பிட்டுள்ளவை missing credit தான்.

சிலருக்கு ஆண்டு பல மாதங்கள் தொடர்ந்து வரவில்லை எனில் அவை அடுத்த ஆண்டுகளின் கணக்குத்தாள்களில் வந்துள்ளதா என பார்த்து, அவ்வாறு குறிப்பிட்ட மாத சந்தா  வரவில்லை எனில் அவை Missing credits எனக்கொள்ளவும்.

2017-  2018 ஆண்டில் (-) எனக்குறிபிடப்பபட்ட தொகை Missing credit ஆகும்

குறிப்பிட்ட மாதத்தில் DA Arrear மட்டும் கணக்கில் சேர்ந்து, அம்மாத சந்தா சேரவில்லை எனில் அவையும் Missing credits ஆகும்.

(எளிமையான வழி உங்கள் கணக்கு தொடங்கிய மாதம் முதல் மார்ச் 2018 வரை அனைத்து மாதங்களையும் வெள்ளைதாளில் எழுதி உங்கள் online account slip வைத்து ✅ செய்து விடுபட்ட  மாதங்களை  Missing Credits ஆக கொள்ளலாம் )

•எவையெல்லாம் Missing Credit அல்ல?

அதற்கு முன் உள்ள வருடங்களின் கணக்குத்தாள்களில் missing credits என வந்தவை. அந்த ஆண்டுகளுக்கு அடுத்து வந்த ஆண்டுகளின் கணக்குத் தாள்களில் ( * )குறியிடப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை missing credits அல்ல.

மார்ச் மாத சந்தா சில ஆண்டுகளில் ஏப்ரல் மாத சந்தாவுடன் இணைத்து கணக்கில் காட்டுகின்றது. ( 3200+3200=6400) . இது போல உள்ள இனங்களில் மார்ச் மாதம் missing credit அல்ல.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.