Header Ads

Header ADS

ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்

ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்




ஓசோன் படத்தில் ஏற்பட்ட துளை மெதுவாக சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும்.
 
இந்த வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் கண்டறிந்தார். குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.


சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சரியாகி வருவதாக .நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என .நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஓசோனை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16 ஆம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.