கணினி ஆசிரியர்கள் நியமன அரசாணை வெளியீடு !
பிராந்திய ரீதியிலான பணிநியமன ஒதுக்கீடுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தது தவறு என்று புதுவை சட்டப்பேரவையின் அதிமுக
குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.
இது
குறித்து
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு நேர்மாறாக எந்த மாநிலத்திலும் இல்லாத விதத்தில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பிராந்திய ரீதியில் இட ஒதுக்கீட்டை அரசியல் ரீதியான குறுகிய கண்ணோட்டத்தில் ஒதுக்கியதால், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தகுதியான, அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர் கல்வி பயில முடியாத ஒரு சூழ்நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தற்போது வேலைவாய்ப்பிலும் அந்தந்த பிராந்திய பகுதியில் இருப்பவர்களை கொண்டு நிரப்புவது என முடிவு செய்திருப்பது சட்டவிரோதமான செயலாகும்.
இது புதுவை அரசின் பணிநியமன விதிகளுக்கு நேர்மாறான ஒன்றாகும்.
தற்போது கல்வித்துறை மூலம் புதுவை மாநிலத்தில் பாலசேவிகா, பட்டதாரி ஆசிரியர்கள், . இதில் காரைக்காலில் மட்டும் 145 பணியிடங்களுக்கு,
காரைக்காலை சேர்ந்தவர்களை மட்டுமே கொண்டு நிரப்ப அரசாணை வெளியிட்டிருப்பது தவறான ஒன்று.
இது எதிர்காலத்தில் படிக்கும் மாணவர்களிடையே பிரிவினையை தூண்டக்கூடிய செயலாகும்.
இதற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது
எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று.
சம்பந்தப்பட்ட அமைச்சர் காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் காரைக்காலுக்கு நன்மை செய்வதாகக் கருதி, இதுபோன்ற தவறான முடிவெடுத்து அரசிடம் ஒப்புதல் பெற்றிருப்பது தவறான முன்னுதாரணம்.
இதுபோன்ற குறுக்குவழி பணி நியமனத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தவறானது. ஆகவே, இந்த பணிநியமன முறையை ரத்து செய்துவிட்டு, பழைய முறையிலேயே பணிநியமனம் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் அரசு தனது கட்சியாளர்களை திருப்திபடுத்தும் விதத்தில் வாரியத் தலைவர் பதவியில் 25-க்கும் மேற்பட்டோரை நியமனம் செய்ய உள்ளதாக தகவல் வருகிறது. எம்எல்ஏக்கள் இல்லாமல் வெளியாள்களை நியமனம் செய்வதை தடுக்கும் விதமாக அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்தகால வாரிய செயல்பாடுகள், தற்போதுள்ள நிதிநிலை குறித்தும் கடிதம் அளிக்க உள்ளோம். சிக்கன நடவடிக்கை குறித்து பேசும் துணை நிலை ஆளுநர் இந்த விஷயத்தில் முதல்வருடன் ஒத்துப்போகிறாரா என்பது தெரியவில்லை.
வாரியத் தலைவர்கள் நியமனம் குறித்து அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளதா என்பது குறித்து துணை நிலை ஆளுநர் தெளிவுபடுத்த வேண்டும்
என்றார்.
திமுக எதிர்ப்பு: புதுவையில் பிராந்திய ரீதியில் பணிநியமன ஒதுக்கீடு வழங்க திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பிராந்திய இடஒதுக்கீட்டில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிராந்திய ரீதியான துவேசத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் மாவட்டம் பின்தங்கியபகுதி என்ற காரணத்தைக்கொண்டு உயர்கல்வியில் மாணவர்களுக்கு பிராந்திய
இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த பிராந்திய ஒதுக்கீட்டால் புதுச்சேரியில் அதிக மதிப்பெண் எடுத்தும்
தகுதியுள்ள மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதனால் கல்வியில் பிராந்திய ரீதியிலான ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக குரல் கொடுத்தது.
தற்போது அதே காரணத்தை சுட்டிக்காட்டிபிராந்தியஅடிப்படையிலான பணி நியமன ஒதுக்கீடு என்பது எப்படி சாத்தியமாகும்?
அப்படி பார்த்தால் புதுச்சேரியில் அதிக கிராமப்புறங்களை கொண்டு பின்தங்கி உள்ள அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன்களை பின்தங்கிய பகுதியாக அறிவிக்க அரசு முன்வருமா?
இது
அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது. சட்டம் படித்தவர் இந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார்.
முதல்வர் எப்படி இதற்கு ஒப்புதல் அளித்தார்?
மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசு மூலம் அனுப்பப்படும் கோப்புகளை எல்லாம் திருப்பி அனுப்பும் ஆளுநர், இந்த கோப்புக்கு எவ்வாறு அனுமதி அளித்தார்?
பிராந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முன் கல்வியாளர்கள்,
சட்டப்பேரவை உறுப்பினர்கள், நடுநிலையாளர்களை அழைத்து அதன் சாதக, பாதகங்களை விவாதித்திருக்க வேண்டும்.
காரைக்காலை சேர்ந்த கல்வி அமைச்சர் தனது சொந்த விருப்பத்துக்காக தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார். இதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை பாதிக்கும் இந்த பிராந்திய ரீதியிலான இடஒதுக்கீடு பணிநியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக நடத்தும் எனத் தெரிவித்துள்ளார் சிவா எம்.எல்.ஏ.
No comments
Post a Comment