ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது : செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 30, 2018

ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது : செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை



மாதம் தோறும் குறைந்த பட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என்று செல்போன் சேவை நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக தொலைத் தொடர்பு கண்காணிப்பு அமைப்பு டிராய்யிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் மாதம் தோறும் குறைந்த பட்சம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ஜியோ வருகைக்கு பின்னர் பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ள செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் குறைந்த பட்சம் ரூ.35  ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் கால்களை பெற முடியும் என அறிவித்தனர். இது வாடிக்கையாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிராய் எனப்படும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தன.
 
இந்த சூழலில் குறைந்த பட்ச ரீசார்ஜ் செய்யாத  வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்தக் கூடாது என செல்போன் சேவை நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்பாகவே வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் பட வேண்டும் என்றும் டிராய் அறிவுறுத்தி உள்ளது.

No comments: