‘அமேசான், பிளிப்கார்ட்’டுக்கு போட்டி ‘ரிலையன்ஸ் ஜியோ’ திட்டம்
முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் ஜியோ’ மூன்று கோடி வர்த்தகர்களின் வியாபாரம் செழிக்க, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது.
இது
குறித்து, முகேஷ் அம்பானி கூறியதாவது:வலைதளம் வாயிலான விற்பனையை, கடைகளில் மேற்கொள்ளும் விற்பனையுடன் இணைக்கும் புதிய மின்னணு வர்த்தக நடைமுறையை, நிறுவனம் உருவாக்கி வருகிறது.வேலைவாய்ப்புஇது, உலகிலேயே மிகப் பெரிய வர்த்தக வடிவமாக விளங்கும்.
இத்திட்டம், மூன்று கோடி வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அவர்கள், புதிய தொழில்நுட்ப உதவியுடன், பெரிய நிறுவனங்கள் மற்றும் ‘மெகா’ மின்னணு வர்த்தக நிறுவனங்கள் செய்யும் அனைத்து விதமான வர்த்தக நடைமுறைகளை சுலபமாக மேற்கொள்ள முடியும்.ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் சுலபமாக்க வேண்டும். சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக தொழில் புரிய வேண்டும்.
இந்த
கொள்கைகளை, ரிலையன்ஸ் மற்றும் ஆர்ஜியோ நிறைவேற்றும் என, உறுதி கூறுகிறேன்.ஆர்ஜியோவின் புதிய திட்டம், ஒடிசாவைச் சேர்ந்த, லட்சக்கணக்கான திறமையான இளைஞர்களுக்கு, சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகளை வழங்கும்.ரிலையன்ஸ் ஜியோ மூலம், 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஆர்ஜியோ சேவை துவங்கிய பின், உலகளவில், மொபைல் போன் வாயிலான இணைய பயன்பாட்டில், இந்தியா, 150வது இடத்தில் இருந்து, முதலிடத்திற்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அடுத்த இலக்குதொலை தொடர்பு துறையில், ‘ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.என்.எல்.,’ ஆகிய நிறுவனங்களை ஓரங்கட்டி, ஆர்ஜியோ, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த சில மாதங்களில், ஏர்டெல்லை விஞ்சி, இரண்டாவது இடத்தை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மின்னணு வணிகத்தில், முதலிரண்டு இடங்களில் உள்ள, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய தொழில்நுட்பத்தில் மின்னணு வணிகத்தில் களமிறங்க, ஆர்ஜியோ தயாராகி வருகிறது.
No comments
Post a Comment